மாடித்தோட்டத்தில் கீரை வளர்ப்பு
விதைப்பு, பாசனம், அறுவடை இவை மூன்றும்தான் கீரை சாகுபடிக்கு முக்கியம். கீரை வளர்ப்பில் தொட்டியில் வைத்து வளர்ப்பது, தரையில் வளர்ப்பது என இரண்டுவகை உள்ளது. இதில் அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, சிவப்பு தண்டுக் கீரை, பச்சை தண்டுக் கீரை, பருப்புக் கீரை, காசினி கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி இவற்றைத் தொட்டியில் வளர்க்கலாம். புளிச்சக்கீரை, அகத்திக்கீரைகளை தரையில் வளர்க்கலாம்.
தோட்டம்போட வசதிஇல்லாதவர்கள் ஒருபிளாஸ்டிக் சாக்கைஎடுத்து, அதில்பாதி அளவுக்குத்தென்னை நார்க்கழிவு உரத்தைநிரப்பி,அதில்10 கிராம் கீரைவிதையைத் தூவினால்போதும்,20 நாள்களில்கீரை கிடைத்துவிடும்.கீரைவிதைகள் மிகவும்சிறியதாக இருக்கும்,எனவே அதைவிதைக்கும்போது, மேலோட்டமாகத்தூவக் கூடாது,மண்ணுடன் நன்றாகக்கலந்துவிட வேண்டும்.பூவாளியைப் பயன்படுத்திதண்ணீர் விடுவதுநல்லது.மணத்தக்காளிகீரை நன்றாகப்படர்ந்து வளரக்கூடியது, எனவேஒரு தொட்டியில்ஒரு செடிவைக்கலாம்.
கீரைவிதை விதைத்து15 முதல்20 நாள்களுக்குள்சாகுபடி செய்துவிடலாம்.வீட்டுத்தோட்டத்தில் விளைந்தகீரைகளை அறுவடைசெய்யும் போதுமுழுதாகப் பிடுங்கவேண்டாம். பாலக்கீரையைகிள்ளக் கிள்ளவளரும். அதேபோலஅரைக்கீரை, சிறுகீரையைஅறுக்க அறுக்கவளர்ந்து கொண்டேஇருக்கும். கீரைகளுக்குவேப்பம்புண்ணாக்கை தண்ணீரில்ஊறவைத்து அந்தக்கரைசலை பூச்சிதொல்லைக்குபயன்படுத்தலாம்.1லிட்டர் தண்ணீரில்100 கிராம் புண்ணாக்குஎன்ற விகிதத்தில்கலந்து, அதுகரைந்த பின்அந்தக் கரைசலைஎடுத்து,அதனுடன் 10 மடங்கு தண்ணீர்சேர்த்துக் கலந்துசெடிகளுக்குத் தெளிக்கலாம். இதனால் பூச்சித்தொல்லைகள் இருக்காது.
0
Leave a Reply